புதுக்கவிதை எழுதும் தேவதையே
வெண்ணிலவு பொன்னெழில் வானில்
எழுதிய அந்திக் கவிதையோ
தென்றலின் மெல்லிய விரல்கள்
மலரிதழில் வரைந்த வானவில் கோடுகளோ
கண்ணசைவில் கனவுத் திரை விரிக்கும்
புன்னகை மௌனம் புதுக்கவிதை எழுதும்
பெண்ணழகுத் தேவதையே
பொய்களுக்கெல்லாம் உன்னால் ஒரு சந்தை உருவாகி
கவிதை என்ற பெயரில் கொள்ளை விலை போக்குதடி !