அவள் மந்திரவாதி

உன் பெயரைச் சொல்லி சொல்லித்தான்
என்னக்குள் ஒரு கவிஞன்
பரிணாம வளர்ச்சி கண்டான்

உன் ஒற்றைப் பார்வை
இன்னும் பெயரிடப்படாத
பல பரிமாணங்களை-என்
இதயத்தில் எழுப்பி விடுகிறது

நீ
பெயர் சொல்லி அழைத்தால்
ஆண்மை பொசுக்கென பூப்பூத்து விடுகிறது

ஒரு விரல் ஸ்பரிசம்
நரம்பு மண்டலத்தில் இன்னும் வீணை வாசிக்கிறது

கால்குலேடருக்கும் கவிதை எழுத
கற்றுத் தந்தவள் நீ

இந்தக் கவிதைக்கு பிறகும்-என்
பேனாவிற்கு திருப்தியில்லை

உன்
பெயரை எழுதி விட்டு
பேனா சிலிர்த்துக்கொள்கிறது

எழுதியவர் : RAJMOHAN (17-Oct-19, 4:40 pm)
பார்வை : 98

மேலே