தப்பும் தவறும்
பள்ளிக்கு சாலையோரம் நடந்துப்போகும்
பிள்ளைகளின் மீது
தேங்கிக்கிடக்கும் மழைநீரை
வாரி இறைத்துவிட்டு
கண்டுக்கொள்ளாமல் போகும்
வாகன ஓட்டிகள்
பயணத்தின்போது
பக்கத்தில் நின்றிருக்கும்
முதியவர்க்கு அமர இடம் கொடுக்காமல்
தான் அமர்ந்து பயணிக்கும்
இளையோர்கள்
பொது இடத்தில்
கண்மூடித்தனமாக
சிறுநீர் கழிக்கும்
புகைப்பிடிக்கும் சமுதாய
பொறுப்பற்ற மனிதர்கள்
முறையான கணக்கு
வழக்குகளை
சமர்பிக்காமல்
வரி ஏய்ப்பு செய்யும்
வியாபார மாமனிதர்கள்
வாக்குறுதிகளை
வாரிவழங்கி வெற்றிவாகை
சூடிக்கொண்டு தொகுதிப்பக்கமே
வந்து கவனிக்காத பிரதிநிதிகள்
பெற்றோர்களின்
குடும்பச்சுமையை அறியாமல்
தன்போக்குக்கு ஊர்ச்சுற்றும்
பொறுப்பற்ற மகன்கள்
இவர்களெல்லாம்
மாறுவார்களா
மாற்றம் ஒன்றே
ஏற்றத்தை உருவாக்கும் என
உணர்வார்களா
உணர்ந்தால்
சந்தோசப் பூங்காற்று சமூகத்தில் என்றும் வீசிக்கொண்டே இருக்கும்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.