பிரமிப்பு வேண்டாம்
பிரமிப்பு வேண்டாம்.
- பாலு.
ஓ! இளைஞனே!
யாரையும் கண்டு
பிரம்மிக்காதே!
பாராட்டு....
துதி பாடாதே
முன்மாதிரி வேண்டும் தான்
மாதிரி ஆகிவிடாதே
தலைவன் வேண்டும் தான்
தனி தன்மையை இழக்காதே
அன்புக்கு கட்டுப்படு
அடிமையாய் ஒரு நொடி கூட இருக்காதே
எதிலும் பகுத்தறிவு தேவை தான்
ஆனால் அனைத்திலும்
வாக்கு வாதம் அவசியமற்றது.
சரணாகதி சில விஷயங்களில் தேவையே
அதே சமயம் கண்மூடிதனமாக இருந்துவிடாதே .
நீ தான் உனக்கு ஆசான்
உன்னை அனு தினமும் ஆராயும் வரை...
பொருள் பல ஈட்டியவன்
அறிவாளி இல்லை .
பொருள் இல்லாதவன்
முட்டாளும் இல்லை .
வெற்றி என்பது முதலில் வருவது அல்ல.
வெற்றி என்பது பொருள் ஈட்டுவதில் அல்ல.
வெற்றி பெற்றவன் மூளை ஒன்றும் தங்கத்தினால் ஆனது அல்ல
தோல்வியை தழுவியன் மூளை ஒன்றும் கலிமண்ணால் ஆனதும் அல்ல
கால சுழற்சி மாறும் போது
தோல்வி , வெற்றியாக மாறும்
வெற்றி, தோல்வியை தழுவும்
உண்மையான வெற்றி யாதனில்....
உன் வார்த்தை, உன் செயல், உன் நடத்தை, உன் பார்வை, உன் பயிற்சி, உன் ஆற்றல், உன் சிந்தனை
இந்த உலகில்
ஒரே ஒரு மானுட வாழ்க்கையை மேம்படுத்தியிருந்தால்
அது தான் உண்மையான வெற்றி.
மரண படுக்கையில்
மரணிக்க போகும் தருவாயில்
இருக்கும் மனிதனை கேட்டு பார்
இதை தான் கூறுவான்.
வாழ்க்கை என்பது சம்பவங்களின் கூட்டு
நாம் அனைவரும் மிக பெரிய மணித சங்கிலித்தொடர்
இதில் பணக்காரன், ஏழையாவது.
மானுடம் என்பது
மிருகத்திற்கும் இறையான்மைக்கும் நடுவே சிக்கி தவிக்கும் போராட்டம் தானே.
மானுட படைப்பின் நோக்கமே மனித நேயத்தை வாரி வழங்க தான்.
அன்பை அருவியன கொட்டத்தான்.
மனிதனாக வாழத்தான்.
- பாலு.