வெள்ளை மனம்
அன்புக்கு ஏங்கும் உள்ளம்
அது புதிதாக புதிராக
ஏன் கொள்ளுது மயக்கம்
உலகம் புரியா உள்ளம்
உண்மை அறியா எண்ணம்
வெளுத்ததெல்லாம் பால்
என எண்ணத் தோன்றும் பருவம்
யார் அறிவர் இறைவனின் படைப்பில்
இது ஒரு உன்னத உணர்வு
ஆணோ பெண்ணோ இதற்கு விதி விலக்கல்ல
அன்புக்கு அடிமை என்பது இது என்று
போகப் போகத்தான் புரியும்
மனித வாழ்வின் அங்கலாய்ப்பும்
அடித்தளமும் இங்கேதான்
பிஞ்சு மனங்களின் துளிர் விடும் காலம்
பெற்றோர்கள் கையில்தான் யாவும் ,
பிள்ளை மனம் அது வெள்ளை மனம்
கள்ளம் அறியா தூய மனம்