100 சதவீதம் வாக்களிப்போம்
100 சதவீதம் போடுங்க
வாக்கு
போடுவோம்னு
கொடுங்க எங்களுக்கு
வாக்கு
மையினை விரலில் தொட்டு
எல்லோரும் போடுங்க ஓட்டு
வங்காதீங்க அதற்கு துட்டு
ஓட்டு இயந்திரத்தில்
உங்க கை பட்டு
இந்த நாடு ஆகட்டும் பட்டு
கூட்டில் இருக்கும் சிட்டு
சிட்டாகப் போய் வாங்கி வை
வாக்கு சீட்டு
நீங்க போடுவது ஓட்டு அல்ல
கிழிந்து கிடக்கும்
நாட்டிற்கு போடும் ஒட்டு
வாக்குச் சாவடிக்கு
நடந்து வந்தா வலிக்கும்தான்
மூட்டு
அதற்காக போடாம
இருக்காதே
அது ஊழலுக்கு
நீ போடும் பூட்டு
மக்களே நீங்க போடலானா
உங்க ஓட்டு யார்மூலமாவது
வைக்கப்படும் வேட்டு
நாங்க சொல்லும்படி கேட்டு
உங்க ஓட்டை தவறாமல்போட்டு
கடமையை நிலை நாட்டு
அனைவரும் வாக்களிப்போம்
ஓட்டை விற்காமல்