நிலவே
நிலவிலோர் நாள் நீந்துமீன்கள்
நின்மதியாய் தூங்கும்-அன்றோர்
கீதம் அதிசயமாய் இசைக்கும்-அந்நாளில்
வருடிப்பார்க்கும் நம்மினமுன்னை!
தூரத்து நிலவே தொலைதூர வெண்ணிலவே
ஆதவக்கதிர்களுனக்கு
அகலக் கதிர்கள் தராவிடின் -நீயிருக்குமிடம்கூட
நாமறிந்திருக்க வாய்ப்பில்லை!
நீல்-ஆம்ஷ்ரோங்கும் புகழ்பெற்றிரார்
உன்மீது தடம்பதித்து
வென்னீரும் செம்மண்ணும்கூட-நம்மவர்க்கு
தெரிந்திராது உன்னிடமிருப்பதாய்!
உன்னையாராட்ச்சி செய்யனுப்பிய ஏவுகணையில்
பெருந்தொகையினொருபகுதி
பயன் பட்டிருக்கும் நம் ஏழைக் குடிசைகளின்
குடிகள் மகிழ்ந்திருக்க!
..........
யோகராணி கணேசன்
28.வைகாசி.2012