18+ பிடிக்காதவர்கள் விலகிச்செல்லவும்

மெல்லிருட்டின் சன்ன
வெளிச்சம்
நள்ளிரவின் குளிர்
விழிப்பு
உஷ்ணமேறிய உன்மத்த
நிலை
உடைகளைய
துயிலும் நீ..
ஜன்னல் நிலவின் உபயத்தில்
கூர்நாசியும் ஈரிதழும்
உலர்ந்திருந்து உறையவைக்க
கழுத்து ரோமமும்
நெற்றிமுடியும் சிலுசிலுத்து
சிரிக்குதடி..
இருபதின் சிறிது அதிகமே
உன் வயது..
இருப்பினும்
சிகரங்களின் சொந்தக்காரி நீ..
பொறுப்பில்லாக் காவலாளி
உனது மாராப்பு..காவல் மறந்து
கண்டபடி கிடக்குதடி..
தைத்தவளின் தாராளத்தில்
இறக்கம் அதிகமே..
முக்கனியும் தோற்றுவிடும்
இக்கனிகள் எதிர்வந்தால்..
உறக்கம் கெடுத்து உறங்குகிறாய்
உனதழகைப்பருகுகிறேன்..
மன்னித்திடடி படுபாதகி..

எழுதியவர் : Rafiq (19-Oct-19, 10:17 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 174

மேலே