ஒரு பேரழகிக்கு

நீ விட்டு செல்ல
என்னிடம் இப்போது
ஏதுமில்லை
வீடு சென்று
தேடிக்கொள்ளவும்
தேவையில்லை
கவனமாய் நீ பாதுகாத்துக்கொண்டாய்
பறித்து விடத்தான் முயன்றேன்
மனமெனும் மாயப்பெட்டகம்
உன் வசம் பத்திரமாய்..
இருப்பில்
என் நிலை இப்போது
மோசம்தான்
உனக்கென்ன
அர்ச்சனைப்பூக்களாய்
ஆயிரம் பார்வைகள் உனை மொய்க்க
அன்ன நடை போட்டுச்செல்வாய்..
எத்தனை பேர்
அலைகிறார்களோ நடைபிணங்களாய்..
இதயம் இழந்து..
கண்கள் பறித்து
கனவுகள் கொடுத்தாய்
சீக்கிரம் போட்டுக்கொள்ளடி தாலி
மிச்ச இதயங்களாவது
தப்பித்துக்கொள்ளட்டும்...

எழுதியவர் : Rafiq (19-Oct-19, 10:28 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 443

மேலே