அரண்மனை

அரண்மனை

தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன்
டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க வருகிறார்.அப்படியே நீங்கள் கட்டி முடிக்கவுள்ள அரண்மனையையும் பார்க்க விரும்புகிறார். சொல்லி விட்டு நிறுத்தியவனை நல்லது நீ போகலாம்..அடுத்த நிமிடம் அந்த வீரன் குதிரை ஏறி காற்றாய் பறக்க ஆரம்பித்தான்.
தயானந்த் தன் பின்புறம் அழகோவியமாய் முடிக்கும் தறுவாயில் இருந்த அந்த அரண்மனையை புன்னகையுடன் பார்த்தார்.”அற்புத மாளிகையே என் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்ற வந்திருக்கிறாய், என்பதை வரும் மன்னன் வாயால் கேட்கப்போகிறேன்.
அப்பொழுது நீ வெட்கப்பட்டு நிற்கப்போகிறாய்.வாய் விட்டு சொன்னவர் மீண்டும் தன் அருகில்
யாரோ நிற்பதை உணர்ந்தவர் திரும்பி பார்த்தார். அவரது உதவியாளன் சச்சிதான்ந்தன் நின்று கொண்டிருந்தான்.
ஐயா மன்னர் வரப்போகிறாராரா?
ஆம்.சச்ச்சிதான்ந்த்..இன்று மாலை வருவதாக சொல்லி அனுப்பி இருக்கிறார்.வந்து அரண்மனையை பார்வையிடப்போகிறாராம்.
அவர் நிச்சயம் நீங்கள் உருவாக்கிய இந்த அரண்மனையை கண்டு பிரமித்து விடப்போகிறார்.
நிச்சயமாய்.. அனேகமாக அடுத்த மாதம் முடிவதற்குள் அவர் குடி புக நினைத்தாலும் நினைப்பார். சரி நீ என்ன செய்கிறாய் என்றால் உள்ளே சென்று நமது ஆட்களிடம் இந்த விவரத்தை தெரிவித்து விடு. முடிக்க வேண்டி இருக்கும் வேலைகளை முடித்து விட சொல்.
அவர் வரும்போது எந்த வேலைகளையும் செய்து கொண்டிருக்க வேண்டாம். புரிந்த்தா?
அப்படியே செய்கிறேன் ஐயா. அங்கிருந்து நகர்ந்தான் சச்சிதான்ந்த்.
மாலை மன்னர் பூபதி மகராஜ் வந்தவர் அரண்மனை வாயிலில் நின்றவர் தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்..
அற்புதம் அற்புதம் தயான்ந்த., உங்களின் கை வண்ண்மே வண்ணம். இந்த பூவுலகிலே இது வரை யாரும் பார்த்திருக்காக சிருஷ்டியை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த மாளிகையின்
வனப்பு என்னை மதி மயங்க செய்கிறது. இனி எந்த நாட்டு மன்னர்களும், விருந்தினர்களும்
வந்தாலும் இந்த மாளிகையில்தான் தங்குவர். அவர்கள் எல்லோரும் மதிமயங்கட்டும் இந்த மாளிகையை பார்த்து. சொல்லி விட்டு ஆன்ந்தமாய் சிரித்தார் மகராஜா.
நன்றி மன்னா, நீங்கள் அடுத்த மாத இறுதிக்குள் இங்கு குடி வந்து விடலாம்.
நீங்கள் எப்பொழுது சொன்னாலும் ஓடி வந்து விடுவேன்.உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று யோசனை செய்து கொண்டுள்ளேன்.
மன்னா உங்களது அன்பு ஒன்றே போதும்.
இல்லை விஸ்வகர்மா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நிமிடம் உன் கண்களில் இந்த மாளிகையை பார்க்காமல் என்ன்னை போல சாதாரண மக்களின் கண்களாக நினைத்து இந்த மாளிகையை பார்..
வாயிலில் உயிரோடு நிற்பது போல் தோற்ற்மளிக்கும் இரு யானைகளும், அதனை ஒட்டி பளிங்கு போல தோற்றமளிக்கும் முகப்புக்களும் உள்ளே பார்த்தால் இயற்கை
அன்னை வந்து உள்ளே வந்து விட்டாளோ என்ற அமைப்புடன் இருக்கும் சுவர்களும், என்னால் இந்த அழகின் வேதனையை அனுபவிக்க அனுபவிக்க ஆசை அடங்கவில்லை.
மன்னா உங்கள் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. போதும் மன்னா நான் ஒரு கலைஞன், உங்களின் அன்பு என்னை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்தி விடுகிறது.
சர் விஸ்வகர்மா..நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை இங்கு குடிவருவது போலத்தான் வருவேன். அது மட்டுமல்ல இந்த அரண்மனையை சுற்றித்தான் இனி நம் அனைத்து அலுவல்களும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு போடுகிறேன்.
நல்லது மன்னா..விடை பெற்றார் மகராஜா.
மன்னர் வந்து சென்ற பின் இரண்டு நாட்கள் கழித்து வந்த மந்திரியார், தயான்ந்த் உடன் இந்த அரண்மனையை சுற்றிப்பார்த்து, அற்புதமாக உருவாக்கியுள்ளீர்கள். என் கண்களையே நம்ப முடியவில்லை.இப்படி ஒரு மாளிகையை எழுப்ப இனி அடுத்த விஸ்வகர்மா எப்பொழுது தோன்றுவாரோ?
மந்திரியாரே உங்கள் அன்புக்கு நன்றி..
நான் ஒரு யோசனை சொல்லட்டுமா விஸ்வகர்மா அவர்களே
சொல்லுங்கள் மந்திரியாரே..
நீங்கள் வெளியூர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும், உங்கள் பெயர் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி மந்திரியாரே ! நான் இதை பற்றி ஆலோசிக்கிறேன்.
மந்திரியார் விடை பெற்று சென்றவுடன், யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் விஸ்வகர்மா.
அன்று அரண்மனை முழுவதும் அன்று மலர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலாமாய் இருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த அரண்மனையின் அழகில மயங்கி நின்று விட்டனர்.
பூபதி மகராஜா தன் பரிவாரங்களுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார். தன் தளபதியின் காதில் ஏதோ சொல்ல அவரும் தலையாட்டி விட்டு வாசலுக்கு சென்று நின்று கொண்டார்.
வாசலில் தன் உதவியாளனுடன் வந்த விஸ்வகர்மா தயான்ந்துவை இரு கரம் கூப்பி வரவேற்றான் தளபதி. வரவேற்பை ஏற்றுக்கொண்டு தலை குனிந்த விஸ்வகர்மா தயான்ந்த்,
நிமிர்ந்து தான் கட்டி முடித்த அரண்மனையை கண் குளிர கண்டார். அதன் வரவேற்புக்காக அவர் அமைத்திருந்த யானை சிலையை தடவி பார்த்தார்.இரு யானை சிலைகளையும் ஆசை தீர தடவிக்கொண்டிருந்தவரை தளபதி தங்களை மன்னர் மரியாதையுடன் அழைத்து வர சொல்லி இருக்கிறார். நல்லது வாருங்கள் உள்ளே செல்லுமுன் உதவியாளரிடம் திரும்பி நான்
நமது இல்லத்தின் அருகில் இருந்த கோயிலில் நமது பொருட்களை வைத்து விட்டு வந்து விட்டேன்.நீ தயவு செய்து அதை எடுத்து வந்து விடு என்று உத்தரவு இட்டார்.
தளபதி நீங்கள் செல்ல வேண்டாம் என் வீர்ர்களை அனுப்புகிறேன், எங்கு என்று மட்டும் சொல்லுங்கள்.
இல்லை தளபதியாரே, பூஜை செய்த அந்த பொருட்களை இன்னொரு விஸ்வகர்மாதான் தொட வேண்டும். ஆகவே அவர் செல்ல அனுமதி கொடுங்கள்.
சரி சீக்கிரமாய் சென்று எடுத்து வாருங்கள் தளபதி சொல்லி தயான்ந்தை மட்டும் உள்ளே அழைத்து சென்றான்.
வாருங்கள் விஸ்வகர்மா அவர்களே, பூஜைக்கு நேரமாகி விட்டது. அந்த அறையை பூஜைக்கு தேர்ந்தெடுத்து உள்ளோம். நீங்கள் சென்று முதல் ஆரத்தியை காட்டுங்கள், தளபதியாரே அவரை அழைத்து செல்லுங்கள்.
அந்த அறைக்குள் நுழைந்து அங்கு வைத்திருந்த சிலையை குனிந்து வணங்கிக்கொண்டிருந்த விஸ்வகர்மாவை அருகில் இருந்த தளபதி தனது வாளால் அவர்து தலையை சீவினான்.
விஸ்வகர்மாவின் தலை தனியாக சென்று உருண்டது. உடலில் இருந்து இரத்தம் பீச்சியடித்து
அந்த அறை முழுவதும் வழிந்தது.
சிறிது நேரம் அவர் உடல் துடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த தளபதி மன்னர் அருகில் சென்று
அவரது காதில் சொல்ல அவர் முகம் மெல்ல புன்னகை புரிந்தது. நல்ல காரியம் செய்தாய்,
இனி அவன் இது போல எந்த காலத்திலும் இப்படிப்பட்ட அரண்மனையை கட்டக்கூடாது.
சொல்லி விட்டு சிரித்தான்.
அதன் பின் கோலாகலமாக அந்த விழா நடந்து கொண்டிருந்தது. நான்கு மணி நேரம் கழிந்து அந்த அரண்மனை அப்படியே சரிந்து விழுந்து மன்னர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாக சமாதியாகிவிட்டனர்.
ஓரிரு நாட்கள் கழிந்தபின் மந்திரியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான் உதவியாளன். ஐயா அவருக்கு தளபதியே தன்னை வரவேற்க நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சந்தேகம் தோன்றி விட்டது. தான் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்தவர் என்னை காப்பாற்ற அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்.
அது சரி, மாளிகை எப்படி தரை மட்டமானது.
ஐயா, நாங்கள் கலைஞர்கள்தான், ஆனால் சூட்சும்மானவர்கள். அன்று நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் சொன்னது அவர் மனதில் பொறி பறந்தது, அதாவது வெளியூர் சென்று விடு என்று சொன்னதும் அவருக்கு சந்தேகம் வந்து விட்டது.
நாங்கள் எப்பொழுதும் ஒரு கட்டிடத்தை முடிக்கும்பொழுது அதனுடைய முடிச்சாய்
ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதனுள் அமைத்து விடுவோம். எவ்வளவு பெரிய கட்டிடமாய் இருந்தாலும் அங்கிருந்த ஒரு கல்லை மாற்றி வைத்தால் அந்த கட்டிடமே காணாமல் போய் விடும்.அதனை வாயிலில் நின்றிருந்த இரு யானைகளிலும் வைத்திருந்தோம். இவர் உள்ளே செல்லுமுன் அந்த யானைகளை தடவுவதாக தளபதி நினைத்தான். இல்லை, அந்த சூட்சுமத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.
அதாவது அந்த இரு யானைகளும் இத்தனை நாழிகைக்குள் அவரே திரும்பி வந்து அந்த சூட்சுமத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது அந்த அரண்மனையின் முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பித்து விடும்.
அவரைத்தான் அங்கேயே சமாதி ஆக்கி விட்டார்களே,எப்படி வந்து சரி செய்திருக்க முடியும். அந்த யானை சிலைகள் தன்னுடைய வேலையை காண்பித்து விட்டது.
மந்திரி “எனக்கு இவர்கள் திட்டம் புரிந்ததனால் விஸ்வகர்மாவிடம் சொல்லாமல் சொன்னேண். ஆனால் விதி யாரை விட்டது. பெருமூச்சு விட்டார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-19, 2:01 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : aranmanai
பார்வை : 173

மேலே