ரேனுஸ்ரீ-17

என் கால் விரல்களில் ஏதோ கனமாகவும்,உறுவது போன்றும் இருந்தது,என்னவென்று பார்த்தபோது சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட கருநாகம் ஒன்று வலபுறத்தில் இருந்து இடபுறத்திற்க்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது,அதன் பாதி உடல் என் கால் விரல்களின் மீது இருந்தது.

அதுவே நான் பாம்பை முதல் முறையாக நேரில் காண்பது,அதுவும் அவ்வளவு அருகில் இருந்து கண்டதும் உடல் முழுவதும் சிலிர்த்து தூக்கிவாரி போட்டது,என் உடலில் ஏற்பட்ட அசைவை உணர்ந்த நாகம் நகர்வதை நிறுத்தி அமைதியாக இருந்தது அதை பார்த்தவுடன் எனது பயம் ரெட்டிப்பானது,பயத்தில் உடல் முழுவது நடுங்கி வேர்த்துக்கொட்டியது,இதயத்தின் துடிப்பு கடுமையாக இருந்தது,அடக்க முடியா அளவிற்க்கு அழுகை பிறிகொண்டு வந்தது,மெதுவாக எனது இரு கரத்தாலும் சத்தம் வெளிவராதபடி வாயை பொத்தினேன்,கடவுளே,கடவுளே என மனதினுள் கூறியபடி கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.

சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் நாகம் நகர்வதை உணர்ந்து கண்களை திறந்து பார்த்தேன்,சிறிது உயிர் வந்தது போல இருந்தது.
சிறிதும் கண்களை இமைக்காமல் பயத்தோடு பார்த்தபடி இருந்தேன்,கிட்டத்தட்ட நாகத்தின் வால் பகுதி எனது வலது காலில் இருந்தது,இன்னும் சிறு நொடிகளில் நாகம் என்னை கடந்து சென்று விடும் என்ற நிலை இருக்கும் போது என் உடலில் இருந்து வெளியான அதிகப்படியான வேர்வையின் காரணமாக பாதம் காலணியோடு வழுக்கி நாகத்தை இடித்தபடி மண்ணில் உராய்ந்து சிறிது முன்னே சென்றது.

அதிர்ச்சியோடும்,பயத்தோடும் நாகத்தை பார்த்தேன்,அமைதியாக சென்று கொண்டிருந்த நாகம் தடுமாறிய நிலையில் அதன் வால்லை வேகமாக ஆட்டியது,அதன் பருமனான உடலில் ஏதோ நகருவது போல இருந்தது,அதன் வாயை மூன்று இன்ச்(3 inch )உயரத்திற்க்கு திறந்த நிலையில் வைத்திருந்தது,அதை பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருந்தது, அந்த நிமிடம் தான் மரண பயம் என்ன என்பதை உணர்ந்தேன்,பின்னால் நகர்ந்தபடி மரணத்தை நினைத்து கதறி அழுதேன்.

அப்போது நாகம் ஒரு முழு எலியை அதன் வாயில் இருந்து கக்கியது,அந்த வாடை வயிற்றை பிரட்டியது,அருவருப்பாகவும்,உடல் முழுவதும் குசுவது போன்று இருந்தது.
சத்தமாக கத்தியபடி,பதறி விழுந்தடித்து எங்கு ஓடுகிறேன் என்று தெரியாது பைத்திய காரியை போல் மேடு,பள்ளம்,வரப்பு,சேறு என ஏதும் பாராமல் மிக வேகமாக ஓடினேன்.
நீண்ட தூரம் ஓடிய பிறகு கால்கள் ஓய்ந்து தடுமாறியது,மூச்சு வாங்கிய நிலையில் மெல்ல அருகில் இருந்த மரத்தை பிடித்து நின்றேன்,அப்போது என் மூக்கில் இருந்து ஏதோ வழிந்தது என்னவென்று பார்த்த போது எனது வலது மூக்கில் இருந்து ரத்தம் இறங்கிக்கொண்டிருந்தது ஆனால் ஏனோ அது எனக்கு பெரிதாக படவில்லை.
எனக்கு என் பெற்றோரிடம் சென்றால் போதும் என்று இருந்தது,மனம் முழுதும் பாரமாக இருந்தது,உயிர் போவது போல ஓர் சோர்வை உணர்ந்தேன்,என்னால் எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை,வாழ்க்கையே போதும் என்பது போல இருந்தது,என் கையாளும்,சுடிதாரின் மேல் ஆடையினாலும் ரத்தத்தை துடைத்தபடி நின்றிருந்தேன்.

அப்போது தூரத்தில் யாரோ சைக்கிள் பெல்லை விட்டு விட்டு அடிப்பது போல சத்தம் கேட்டு சுற்றி பார்த்தேன் ஆனால் அருகில் யாரும் இருப்பது போல தெரியவில்லை.
நான் மேற்கு திசையை பார்த்தபடி ஓர் உழுத நிலத்தின் மேல் நின்றிருந்தேன்,எனக்கு முன்பாக இரு புறத்திலும் சோலை கருத்துகள் நல்ல வளர்ந்த நிலையில் இருந்தது அதற்க்கு இடையில் வரப்பு இருந்தது,அந்த வரப்பின் மீது தடுமாறிய நிலையில் சென்றேன்,சில இடங்கள் வலுக்கும் படி இருந்தது.

வரப்பின் முடிவில் ஓர் மண் பாதை கிடைத்தது,அந்த பாதையில் நின்றபடி சுற்றி பார்த்தேன்.
வலப்புறத்தில் மீண்டும் விவசாய நிலங்களும்,மேற்கு திசையின் சிறு தொலைவில்(around 200meter ) ஒரு வீடும்,அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு வீடும் இருந்தது,இடது புறம் சென்றால் சிறு தொலைவில்(around 250 மீட்டர்) மண் பாதை முடிந்து ஓர் தார் சாலை இருப்பதையும் பார்க்க முடிந்தது,அப்போது மீண்டும் அதே சத்தம் இடப்புறத்தில் இருந்து வந்தது,அந்த சத்தம் வந்த திசையை நோக்கி அந்த மண் பாதையில் மெல்ல செல்ல ஆரம்பித்தேன்.
அந்த சோழகருது செடிகளை எல்லாம் கடந்து சென்ற போது தொலைவில் யாரோ ஒருவர் வரப்பின் மீது இருந்த மரத்தில் சாய்ந்தபடி அலைபேசியில் பேசிக்கொண்டே பக்கத்தில் இருந்த சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டிருந்தார்.

அவர் ஸ்ரீ போட்டு இருந்த அதே ஆடை அணிந்திருந்தார்,பார்ப்பதற்கும் ஸ்ரீ போல தெரிந்தது.
அதனால் வேகமாக முன்னேறி சென்றேன்,அருகில் செல்ல செல்ல முகம் தெளிவாக தெரிந்தது,அங்கிருப்பது ஸ்ரீ என்று உறுதி ஆனது.

ஸ்ரீ அலைபேசியை அனைத்து சைக்கிளை வரப்பின் மீது ஓட்டியபடி மண் பாதையில் சைக்கிளை இறக்கி செல்ல தொடங்கினான்.

எனக்கோ அவனை துரத்தி ஓடும் சத்தி இல்லை,இருப்பினும் ஹே என்று கத்த முடியாமல் கத்தியபடி அந்த கரடு முரடான/மேடு பள்ளமுமான பாதையில் ஓடினேன்,அப்போது அந்த மண் பாதையின் நடுவே இருந்த சிறு குச்சிகளில் கால் தடுக்கி கீழே விழுந்தேன்,தலையை உயர்த்தி பார்த்த போது ஸ்ரீ சென்றுகொண்டிருந்தான்.
பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து அவனை நோக்கி வீசி எறிந்தேன்,ஆனால் அது அவன் அருகில் கூட செல்லவில்லை,ஸ்ரீயை மீண்டும் துளைத்துவிட்டேன்.

இம்முறை வலது முட்டியில் நல்ல அடி மற்றும் வலது பாதம் குச்சியால் கிழிக்கப்பட்டு ரத்தம் வழிந்தது,நடக்க முடியாத அளவிற்க்கு கணுக்காலில் பலத்த வலியையும் உணர்ந்தேன்,ஏனோ திடீர் என அடக்க முடியாத அளவிற்க்கு சிரிப்பு வந்தது,பின்பு சிரிப்பு அழுகையாக மாறியது,அங்கேயே சில நிமிடங்கள் கதறி அழுதபடி நின்றிருந்தேன்.

பிறகு ஸ்ரீ நின்றிருந்த மரத்தின் அடியில் சென்று கால்களை முட்டியிட்டு மடித்த நிலையில் அமர்ந்தேன்,பின்பு மரத்தில் தலையை சாய்த்து எந்த சிந்தனையும் இன்றி வரப்பை முறைத்து பார்த்தபடி அமர்த்திருந்தேன்.
என்னால் என் உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை,எனது உடலில் இருந்து ஆன்மா தனித்திருப்பது போல இருந்தது,என்னால் என் உடலையும் ஆன்மாவையும் பிரித்து பார்க்கமுடிந்தது,பொய்யான உடலில் மெய்யான எனது ஆன்மாவை உணர்தேன்.

அப்போது எனது இடது கண்ணின் ஓரத்தில் ஏதோ வெளுச்சம் படுவதை உணர்ந்து என்னவென்று பார்த்தேன்,சூரியனின் வெளுச்சம் ஏதோ ஒரு பொருளின் மீது பட்டு பிரதிபலித்துக்கொண்டிருந்தது..

அதை கையில் எடுத்து பார்த்தேன்,அது ஒரு கிரிஸ்டல் அய்யப்பா கிசெய்ன்.
இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தபடி கீசெயினை பார்த்தேன்.
"இது பவித்ரா கிட்ட கொடுத்து ஸ்ரீ கிட்ட குடுக்க சொன்ன கீசெயின் தானா!?"என்று நினைவிற்க்கு வந்தது.
"ஸ்ரீ கடைசியா இருந்த இடத்துல இருந்து இது கெடச்சு இருக்குனா இத ஸ்ரீதா விட்டுட்டு போய் இருக்கனு,ஸ்ரீ நா குடுத்த கீசெயின இன்னமோ பத்திரமா வெச்சு இருக்கானா...,அப்ப ஸ்ரீ யோட மனசுல இன்னமு நா இருக்க!"என்று நினைத்தபடி மகிழ்ச்சியில் புன்னகித்தேன்,ஏதோ தெம்பு வந்தது போல இருந்தது,அனுபவித்த கஸ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்தது போல இருந்தது.
ஸ்ரீ யை கண்டிட மனம் துடித்தது,என்னை காண்கையில் அவனுடைய உணர்ச்சி வெளிப்பாடு(expression )எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது.
கீசெயினை உள்ளங்கையில் வைத்து பார்த்தபடி இருந்தேன் அப்போது யாரோ அருகில் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்த்தேன்.

"ஸ்ரீ" என்னை பார்த்தபடி நின்றிருந்தான்!.
அவனை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை,நான் பார்ப்பது நிஜமா என்பது போல அதிர்ச்சியோடு அவனை பார்த்தபடி இருந்தேன் ஆனால் அவன் முகத்தில் எந்த ஒரு எதிர்வினையையும்,உணர்வையும் என்னால் பார்க்க முடியவில்லை.

எதையோ தீவிரமாக யோசித்தபடி ஓர் பெருமூச்சோடு என்னை பார்த்து கையை நீட்டினான்.

நாம் எழுவதற்க்கு உதவுவதற்காக நம் கையை கொடுக்க சொல்லி கேட்கின்றான் போல என்று நினைத்தபடி தயக்கத்தோடும்,சிறு புன்னகையோடும் என் கையை அவன் கை மீது மெல்ல வைக்க சென்றேன்.

கி(key )என்று கோவமான குரலில் கேட்டான்.
அப்போது தான் புரிந்தது அவன் கேட்டது என்னிடம் இருந்த கீசெயினை என்று.
சங்கடத்தோடும்,கவலையோடும் கீசெயினை எடுத்து அவன் கையில் கொடுத்தேன்.
ஏதோ யோசனையோடு என்னை சலிப்போடு பார்த்த படி அதை வாங்கி அவன் கால்சட்டை பையில்(pant pocket )வைத்துவிட்டு அலைபேசியில் யாரையோ தொடர்புகொள்ள முயற்சித்தபடி அங்கிருந்து சென்றான்.

அவனுக்கு என்னை யார் என்று தெரியா விட்டாலும் எனக்கு உதவ வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றவில்லையா என்று நினைத்து வியந்தேன், நான் பார்ப்பது சிறு வயதில் நான் கண்ட அதே ஸ்ரீ இல்லை என்பதை உணர்தேன்,
அதற்கு மேல் அவனிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவோ அல்லது அவன் பின்னால் ஓடவோ விரும்பவில்லை.
வீட்டிற்கு சென்றிட மனம் ஏங்கியது,என் தாய்,தந்தையாருடன் இருந்தால் போதும் என்று தோன்றியது,என் வாழ்வில் முதல் முறையாக மிக மோசமாக என் பெற்றோரின் பிரிவை உணர்ந்தேன்.

தொடரும்....

எழுதியவர் : அனுரஞ்சனி (21-Oct-19, 7:55 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 186

மேலே