முற்றுப்பெறும்

மூடநம்பிக்கையின்
முகெலும்பை
முறித்து
மூடத்தனத்தின்
மூச்சுக்குழலை
மூழ்கடித்து
மூடமதியின்றி
முற்போக்கான
மூதறிவுடன்
முன்னோர்
மூத்தோர்
முன்மொழிந்த
முதிரறிவை
மூலப்பொருளாக்கி
மூளையை
முடுக்கிவிட்டு
முடக்கமின்றி
முகவுரையெழுத
முற்பட்டால்
முடிவுரையும்
முரணின்றி
முற்றுப்பெறும் !


பழனி குமார்
21.10.2019

எழுதியவர் : பழனி குமார் (21-Oct-19, 9:56 pm)
பார்வை : 169

மேலே