ஏமாற்றக் கவிதை - 8

ஏமாற்றக் கவிதை - 8
====================

மாட்டு வண்டி மேலேறி
பாட்டுப் பாடி சுற்றி வந்தோம்..
ஏட்டுப் படிப்பு முடித்த பின்னே
வேட்டு எனக்கேன் வைத்தாய் கண்ணே!

ஆட்டுக் குட்டி மந்தையிடை...
பேசிக் கிடந்தோம் மணிக் கணக்காய்..
போட்டுக் கொடுத்தது அந்த நிலவோ
எங்கே சென்றிட்டாய் எந்தன் நிலவே?

குதிரை வேகத்தில் பிரிந்தவளே
பழி என்மேல் சொல்லித் திரிபவளே..
எதிலும் துணிந்தே பேசி வந்தேன்
இன்றோ பதிலின்றி தவிச்சு இருக்கேன்!

குரங்கு கூடும் மலையேறி
வணங்கி வந்தோம் ஒரு கடவுள்..
அந்த சாமியிடம் நீ கைகூப்பி
வேண்டியது இந்த பிரிவைத் தானா?

கரடி பொம்மை பிடிக்குமென்று
வருடும் நேரம் நீ சொல்லிடுவாய்..
இன்று கரடி போலே ஆகிவிட்டேன்
உனக்கு பிடிக்காத கரடியோ இப்பொம்மை!

யானை முகத்தான் வரம்வேண்டி
நானும் நீயும் போய் வந்தோம்..
தேனாய் இருந்தவள் அன்று வரை
கூனாய் இதயம் மாற்றிக் கொண்டாய்?

மானே தேனே எனஅழைத்து
எனக்கு கூச்சம் தந்தாயே அன்று..
மூன்றே நாளில் மறந்து விட்டாய்
வேண்டா வெறுப்பேன் எனக்கு தந்தாய்?

சிங்கப் பெண்ணென உனை அழைத்து
கிரீடம் சூட்டிட நான் நினைக்க‌
கங்கையில் கழுவிடும் பாவத்தைப் போல்
என்னை விட்டதும் ஏன் ரதியே!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Oct-19, 5:56 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 257

மேலே