உன் சுவாசமாய் என் காதல் மாறுமா

கண்ணே என் கண்ணே
வா வா என் முன்னே
காதல் நீ சொல்ல
காத்திருப்பேன் நான் ....

என் நிலா பெண்ணே
என் நிழல் எங்கே
தேடி சொல்லிட வா
என் தேடல் நீயல்லவா

கனவை தந்து
உறக்கம் பறித்து
உடலை தந்து
உயிரை பறித்து
ஏன் மாயை செய்கிறாய்

மருதாணி சிவக்கும்
நேசத்தை குறிக்கும்
அளவெல்லாம் சொல்லி சென்றாயே
கொல்லாமல் என்னை கொன்றாயே

காதல் சொல்லுகின்ற வரையில்
மலையின் பாரம் உண்டு மனதில்
சொல்லிட வார்த்தை இல்லை எளிதில்
உன் காதலே என் சுவாசமாய்

தானாய் விரும்புகின்ற மனது
உன்னை கேக்கின்ற பொழுது
எனக்கும் சம்மதிக்கும் வயது
உன் சுவாசமாய் என் காதல் மாறுமா ???

எழுதியவர் : ருத்ரன் (22-Oct-19, 3:09 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 382

மேலே