மருத்துவ வெண்பா – வாழைக்காய் - பாடல் 14

’ர்’ ’ழ்’ ஆசிடையிட்ட நேரிசை வெண்பா

வாந்திபித் தம்பேதி வாய்நீர் வயிறுளைதல்
ஆ'ர்'ந்தவன லங்காசம் அண்டாவாம் – சூ'ழ்'ந்தேறு
செம்புனலுந் தென்புமுண்டாந் திண்டி மிகப்பெருகும்
அம்புவியுள் வாழைக்காய்க் காம்.

குணம்:

வாழைக்காயினால் பித்த வாந்தி, பயித்தியம், பித்தாதிசாரம், உமிழ்நீர் சுரப்பு, வயிறுளைதல், உஷ்ணம், இருமல் இவை போகும். ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். போஜனம் அதிகரிக்கும்.

உபயோகிக்கும் முறை:

இதன் மேல் தோலை நன்றாய்ச் சீவிச் சுத்தப்படுத்தித் துண்டு துண்டாய் அரிந்து பொரியலாக அல்லது வறுவலாக பாகப்படுத்திச் சாப்பிட முற்கூறப்பட்ட நோய்கள் போகும்; தேகம் பெருக்கும். ஆனால் வாய்வு மிகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 10:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே