மருத்துவ வெண்பா – செம்மறியாட்டுத் தயிர் - பாடல் 15

நேரிசை வெண்பா:

செம்மறியாட் டின்தயிரைத் தின்ன மதுரமிகும்
கொம்மைமுலை மாதரசே! கூறக்கேள் – அம்ம
கரப்பான் சொறியுங் கடுப்பிரத்த வாய்வு
முரப்பா முடல்கெடுமென் றோர்.

குணம்:

செம்மறியாட்டின் தயிரை உண்டால் மிகுந்த சுவையுடையதாகும். ஆனால் இதைத் தொடர்ந்து உண்பவர்களுக்கு கரப்பான், சொறி, மூலம், மூலக்கடுப்பு, வாய்வும் உண்டாவது உறுதி என்றும், உடல் நலம் கெடும் என்றும் கூறுகிறார் இவ்வாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 11:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே