சிந்தகி -- உரையாடல் குறுங்கதை

'சிந்தகி' ன்னு பேரு வைடா கொள்ளுப் பேரா
■■■■■■■■■■■■
துஷாரு, அடே கொள்ளுப் பேரா.
@@@@
என்னங்க பாட்டிம்மா
@@@@@@@
என்னோட எள்ளுப் பேத்தி பொறந்து ஒரு வாரம் ஆகுது. நீயும் உன்னோட மனைவி குசுப்பும் கொழந்தைக்கு நல்ல இந்திப் பேரை முடிவு பண்ணீட்டாங்களா?
@@@@@
இல்லங்க பாட்டிம்மா. நீங்க தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களப் பாக்கறதில்ல. இந்தித் தொடர்களத் தானே பாக்கறீங்க. நம்ம ஊரில யாருமே குழந்தைகளுக்கு வைக்காத புதுப்பேரா வையுங்க.
@@@@@
எனக்கு தொண்ணூறு வயசு ஆகுது. எனக்கே அந்தக் காலத்திலயே 'சானகி'-(ஜானகி) ன்னு இந்திப் பேரத்தான் வச்சாங்க. எங்க நீயும் குசுப்பும் என்னோட எள்ளுப் பேத்திக்கு தமிழ்ப் பேர வச்சு அசிங்கப்படுத்தீடீடுவங்களோன்னு கவவைப்பட்டேன். நல்ல வேளை என்னையே பேரு வைக்கச் சொல்லீட்டீங்க.
நல்லதாப் போச்சுடா.
@@@@
சரி. நீங்க விரும்பற பேரைச் சொல்லுங்க பாட்டி.
#@@@@@@@
கொழந்தை புதங்கெழமை காவைல பத்து மணிக்கு பொறந்தா இல்லையா?
@@@@@
ஆமாங்க பாட்டிம்மா.
@@@@@@@
அந்த நேரம் நா ஒரு இந்திப் படத்தப் பாத்துட்டு இருந்தேன். அந்தப் படத்தில "சிந்தகி ஏக்கு சப்பரு" ஒரு அருமையான பாட்டு வருது. அந்த 'சிந்தகி' சொல்லறதுக்கு அருமையா இருக்குதடா கொள்ளுப் பேரா. என்னோட எள்ளுப் பேத்திக்கு 'சிந்தகி'ன்னு பேரு வச்சிருடா துஷாரு.
@@@@@@
சரிங்க பாட்டிம்மா. 'ஜிந்தகி' அருமையான பேரு. ஸ்வீட் நேம் பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (24-Oct-19, 10:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

மேலே