தீபாவளி

தீபாவளி

வான் நோக்கி சென்று வெடித்து வண்ணங்கள் சிதறிட
வாய்விட்டு வாண்டு ஒன்று அதைக்கண்டு சிரித்திட
வானவில் தோற்கும் வண்ணம் வனிதையர் சேலை உடுத்திட
வாங்கிய வெடிகளும் வந்தவர் கொணர்ந்த வெடிகளும் குவிந்திட
விடிந்தும் விடியாத காலை பொழுதினில் விளக்குகள் கண்சிமிட்டிட
விருந்து வரும்மென விதவிதமா பண்டங்கள் வீடுகளில் சமைத்திட
வண்ணத்து பூச்சிபோல் கண்கவர் ஆடையில் குழந்தைகள் ஓடிட
வயது முதிர்த்தவரை எல்லோரும் வணங்கி வாழ்த்து பெற்றிட
வாசலில் வண்ண கோலமிட்டு தீபங்கள் ஏற்றி வைத்திட
வான் நட்சத்திரத்திற்கு சவால் விடும் வகையில் ஜாலங்கள் செய்திட
வந்ததம்மா அந்த நாளும் தீபாவளி என்ற பெயருடனே

எழுதியவர் : கே என் ராம் (26-Oct-19, 2:07 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : theebavali
பார்வை : 303

மேலே