காதல்

கண்ணுக்கு தெரியும் அவள்
அங்கம் ஒவ்வொன்றும் அழகே
அவள் கண், அவள் உதரங்கள்
அவள் கூந்தல் அவள் இடை
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
ஆனால் கண்ணுக்கு தெரியா
ஒன்றை என்னவளில் நான் கண்டுகொண்டேன்
அதுதான் அவள் உள்ளத்தில்
நான் காணும் அன்பு அவள்
பேசும் மொழியால் அறிந்துகொண்டேன்
அதுதான் அவள் என் மீது கொண்ட காதல்
அது அவள் அழகிற்கு அழகு
என்றும் அழியா அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-19, 8:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 271

மேலே