மண்ணின் மணம்
வரப்பில் மாமன் வரவைக் கண்டு
வழியை மறித்தாள் வம்பாய்ப் பெண்டு..
அவனும் ஆசையில் அணைத்தான் அள்ளி
அன்பைக் காட்டினாள் அவனைத் தள்ளி..
சேற்று வயலில் விழுந்தவன் எழுந்தான்
செய்வ தறியா தவளும் அழுதாள்..
ஓடிச் சென்றே அவனைப் பிடித்தாள்
ஒட்டிய சேற்றைச் சேலையில் துடைத்தாள்..
கட்டிப் பிடித்தான் அவளை மீண்டும்
காதல் இதுவே கனிந்திட வேண்டும்...!