சங்கொடுவா ராமாநு சம் 2 - இன்னிசை வெண்பாக்கள்

இன்னிசை வெண்பாக்கள்

பந்தியில் நெற்சோறும் பாற்கூட்டும் பாங்குடன்
சிந்தாமல் பக்குவமாய் காய்கனிகள் வைத்துவர
அங்கிருந்த ஓர்புலவர் கேட்டார் ஒருஅதிர
சங்கொடுவா ராமாநு சம். 4

பந்தியில் நெற்சோறும் பாற்கூட்டும் பாங்குடன்
சிந்தாமல் பக்குவமாய் காய்கனிகள் உண்டபின்
இங்கே கதிரேசஞ் செட்டியாரெ னக்கதிர
சங்கொடுவா ராமாநு சம். 5

அறுசுவை உண்டியுண்ணும் வேளையில் அங்கே
ஒருபுலவர் காரரசம் உண்டபின் கேட்டாரே
இங்கே ஒருஎளியோ னுக்கேதான் பாற்,பாய
சங்கொடுவா ராமாநு சம். 6 வ.க.கன்னியப்பன்

Shyamala Rajasekar • 10-Jun-2014 2:54 pm

இன்னிசை வெண்பா

பொங்கலுடன் .சாம்பாரும் போற்றும் மெதுவடையும்
வெங்காயச் சட்னியுடன் வேண்டிச் சுவைத்திட
இங்கெனக்கு வேண்டும் எலுமிச்சை நற்கனிர
சங்கொடுவா ராமாநு சம். – சியாமளா இராஜசேகர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-19, 4:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே