தீபமும் தீபாவளியும்

இருண்ட அறைக்கு ஒரு
அகல் விளக்கு ஏற்றிவைக்க
தீபமாய் ஒளி சேர்க்கும் இருள் நீக்கி,
இருண்ட கானகமாய் இருப்பினும்
அந்த இருட்டை அகற்றி
கானத்தைக் கடக்க ஒரு அகல் விளக்கு போதுமே
ஒரு ஒற்றை அடி பாதையை காட்ட,
கானகத்தைக் கடக்க,
அதனால் அல்லவோ தீபவொளி
இறைவனாய் போற்றப்படுகிறது
இன்ன மதம் என்றின்றி எல்லா மதங்களாலும்
தனம் சேர இலக்குமி வழிபாடு உண்டு
தீபிகா என்றே இலக்குமிக்கு மறு பெயர்
தீப ஒளியில் இறைவனை துதிக்கின்றோம்
வெளியில் காணும் இருளை
உள்ளதை ஆட்டிவைக்கும் அழுக்காறு
ஆதி இருளை போக்க , ஞான தீபம்
' தனம், கல்வி , தளர்விலா மனம்
அகத்தில் தெய்வ ஒளியும் 'காண
தீபத்தை ஏற்றிவைத்து தொழலாம்
வாழ்வில் எல்லா நலமும் கூட்ட
தீபாவளி திருநாளில்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (27-Oct-19, 7:53 pm)
பார்வை : 83

மேலே