பேரு னியில முடியணும்
பேரு 'னி'யில முடியணும்
■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆
அடே சுரேசு, உம் பையனுக்கு உங்க தாத்தா பேரையே வச்சிருடா.
@@@@@
பெரியம்மா, என்னோட அப்பாவும் பெரியப்பாவும நான் பொறக்கறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே ஒரு விபத்தில எறந்துட்டாங்க. என்னப் பெத்த அம்மா, உங்க தங்கச்சியும் நான் பொறந்து ஆறு மாசம் ஆனதும் எறந்துபோச்சு. என்ன வளத்து ஆளாக்கினது நீங்கதான். உங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டேன்.
@@@@@@
தாத்தா மதுரைக்காரர். அவுரு பேரு ஆனைமுத்து. மெட்ராசுக்கு வந்து தன்னோட பேரை 'டில்லி'ன்னு மாத்தி வெச்சுட்டாரு.
@@@@@@
எம் பையனுக்கு 'டில்லி'ன்னு வைக்கலாம். ஆனா இந்தக் காலத்து அந்தப் பேரு சரி வராது பெரியம்மா. எம் பையன் படிச்சு நல்ல தொழில் பண்ணி கோடீஸ்வரனா வாழணும். என்ன மாதிரி கட்டடத் தொழிலாளியாக் கஷ்டப்பட்டு வாழக்கூடாது.
@@@@@@
அப்ப வேற என்ன பேரை எம் பேரனுக்கு வைக்கப் போற?
@@@@@@@
பேரு 'னி'ங்கற எழுத்தில முடியணும். அப்பத்தான் கோடீஸ்வரனா வாழுவான்னு சோசியரு சொல்லிட்டாரு..
##@#####
அப்ப உங்க தாத்தா பேரு...?
@@@@@@
யோசிக்கிறேன் பெரியம்மா. நம்ம நாட்டில சில கோடீஸ்வரங்க பேரெல்லாம் 'னி'யில முடியுது. அம்பானி, அதானி, ஜலானி. இந்த மாதிரி பேரு எம் பையனுக்கும் வைக்கணும். தாத்தா பேரு டில்லி. எல்லாரும் 'தில்லி'னுதான் அவரக் கூப்புடுவாங்களாம். பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாங்க.
@@@@@@
அதானால....?
@@@@##
அதனால எம் பையனுக்கு 'திலானி'ன்னு
பேரு வச்சுலாம்.
@@@@@@
சரிடா சுரேசு. நாளைக்கே நீ சொன்னபடி என் மருமகள் அஞ்சலையையும் எம் பேரன் திலானியையும் ஆசுப்பத்திரில இருந்து கூட்டிட்டு வந்திரு.
@@@@@@@@
சரிங்க பெரியம்மா.