என்னடா பொட்டப் புள்ள பேரை வச்சிருக்க

வாடா முருகய்யா. என்னடா நீ மட்டும் வந்திருக்கிற. மருவ மஞ்சளாவையும் கொழந்தையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே.
@@@@@@@
அம மா தீபாவளி நெருங்கீட்டு இருக்குது. மஞ்சளாவுக்குப் பையன் பொறந்து ஒரு மாசந்தான் ஆகுது. இப்ப எப்பிடி அவுங்க ரண்டு பேரையும் கூட்டிட்டு வர்றது. எனக்கு இன்னிக்கு ஒரு நாள்தான். இங்க வர அனுமதி கெடச்சது. உன்னை சென்னைக்கு அழைச்சுட்டு போகத்தான் நான் வந்தேன்.

@@@@@
சரி பையனுக்கு என்ன பேரு வச்சீங்க?
அவந் தாத்தா பேரை வச்சீங்களா?
@@@@@
அப்பா பேரு முனியாண்டி. அந்தப் பேரை பையனுக்கு வச்சா நல்லா இருக்காதும்மா.
@@@@@#
அது சரி. வேற என்ன பேரை வச்சீங்க?
@@@@@@
நான் வேலை பாக்கற நகைக்கடை மொதலாளி பேரையே வச்சுட்டோம். மொதலாளி தங்கமான மனுசன். பையனுக்கு ரண்டு பவுனு தங்கச் சங்கிலியைப் பரிசா குடுத்து வாழ்த்தினாருமா. அந்தத் தங்கமான மனுசன் பேரையே எம் பையனுக்கு வச்சுட்டேம்மா.
@@@@
சரி. அந்தப் பேரச் சொல்லுடா மகனே.
@@@@@@@
ஜெயந்திலால்.
@@@@@@@
என்னடா பொட்டப் புள்ளைக்கு வைக்கிறப் போயி ஆம்பளப் பையனுக்கு வச்சிருக்கறீங்க? செயந்தி. அதுகூட லாலுங்கற வாலு? என்னடா இது?
@@@@@@@
ஏம்மா எம் மொதலாளி பொம்பளையா? அழகான ஆம்பளச் சேட்டுமா?
@@@@@@
சரி. சரி. மொதலாளி நல்ல மனுசன். மகராசனா இருக்கட்டும்.
@@@@@@
சரி. எம் பையம் பேருக்கு அர்த்தமெல்லாம் கேக்காதே. பொறப்படு நாலு மணிக்கு சென்னைக்கு கெளம்பணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
■■■■■■■■■■■■■■■■■■■■■■◆■◆■■
Jayanti = victorious
Lal = red colour, beloved, dear one, lovely

எழுதியவர் : மலர் (28-Oct-19, 4:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 141

மேலே