கித்தனா
டேய் பொன்னுராமா இங்க வாடா.
@@@@@@
என்னம்மா?
@@@@@
ஏன்டா கவலையா இருக்கற?
@@@@@
மனைவி முத்தம்மாளுக்கு ரண்டாவது கொழந்தையும் பொறந்திருச்சேம்மா. நான் ரண்டு பொண்ணுங்கள வளத்து, படிக்க வச்சு எப்பிடி கரையேத்தப் போறனோ?
@@@@@@
பெண் கொழந்தைன்னா மகாலட்சுமிடா.
நீயேன்டா கவலைப்படற. நேத்து செய்தில சொன்னாங்க. ஆயிரம் ஆண் கொழந்தைங்க பொறந்தா தொளாயிரம் பெண் கொழந்தைங்க தான் பொறக்கறாங்களாம். இன்னும் இருபது வருசம் கழிச்சு நூத்துக்கு பத்து ஆம்பளப் பசங்க கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கெடைக்காம அலையப் போறாங்கடா. லட்சக்கணக்கான பசங்க சாமியராகணும். இல்ல பாரதக் கதை மாதிரி 5 பேரு ஒருத்தியக் கட்டி வாழ்க்கை நடத்தனும்.உன் பொண்ணுங்க ரண்டு பேருக்கும் மாப்பிள்ளைங்க வரிசையில நின்னு காத்துக் கெடப்பாங்கடா. வரதட்சணையை உம் பொண்ணுங்களுக்கு வாரிக் குடுப்பாங்கடா. சந்தோசமா இருடா சாமி.
@@@@@@
எதோ நீ சொல்லறது ஆறுதலா இருக்குதும்மா..மூத்தவளுக்கு 'கீர்த்தனா'ன்னு பேரு வச்சோம். இப்ப பொறந்த பொண்ணுக்கு நீதாம்மா ஒரு புதுமையான இந்திப் பேராச் சொல்லணும். இன்னும் அஞ்சு வருசம் போனா தமிழ் நாட்டில ஒரு பயகூட தன்னோட கொழந்தைக்கு தமிழ்ப் பேரை வைக்கமாடான். நூத்துக்கு நூறு இந்திப் பேருங்களாத்தான் இருக்கும். தமிழ்நாடுங்கிற பேரையே இந்திநாடுன்னுகூட மாத்திடுவாங்க. அந்த அளவுக்கு இந்திப் பேரு வெறிபிடிச்சு திரியறாங்க. சரி. அது கெடக்கட்டும். அம்மா தொலைக்காட்சில இந்திப் படங்கள், இந்தித் தொடர்கள வெறித்தனமா பாக்கற. 'இருளாயி'ன்னு இருந்த உம் பேரை 'இருளாஶ்ரீ' -ன்னு மாத்திட்ட. சரி. உன் ரண்டாவது பேத்திக்கு 'கீர்த்தனா' மாதிரியே உள்ள ஒரு இந்திப் பேரை வைம்மா.
@@@@@
இன்னிக்கு ஒரு இந்திப் படம் பாத்தேன். அதில "கித்தனா பியாரு"ன்னு ஒரு பாட்டு பாடினாங்க. என்னோட ரண்டாவது பேத்திக்கு 'கித்னா' (Kitna = how much) -ங்கற பேரையே வச்சிருடா மகனே. 'கீர்த்தனா' , 'கித்னா' பேருங்க ரண்டும் நல்ல பொருத்தம்டா பொன்னு.
@####
'கித்னா' ரொம்ப அருமையான பேரும்மா. சுவ்வீட்டு நேமும்மா.
■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆