கடல்
காசே வாங்காமல் தினம் தினம்
சுமக்கிறாய் கப்பலை
நீ வாங்கிய வரம் அப்படியோ
விருந்திற்கு அழைக்காமல் வீட்டின்
வாசல்வரை வருகிறது உன் அலை
மனிதனை மதிப்பதில் நீ என்றும் புதுவிதம்
உப்புகள் அதிகம் என்பதால்தான் ரோஷத்துடன்
சூறாவளி சுனாமியாய் சுழட்டுகிறாய்
இதில் உன் கோபம் என்றும அழிக்க முடியாத வரலாறு
சாலைகள் இல்லை அதில் தடங்கலும் இல்லை
இருந்தும் பயணத்தின் போது ஆடி அசைந்து
ஏறி இறங்கிதான் செல்கிறேன்
கடல் தாய் என்றார்கள் உன்னை
அதனால்தான் அணைத்து உயிரினங்களும் உன்னுள்
பசியாறி உயிர் வாழ்கிறதோ
சொல் உன் மார்பகம் எங்கே
இந்த அகதியும் சற்று பசியாறி கொள்கிறேன்
உன் மடிக்கொடு நான் தலைசாய்ந்து உறங்க
என்னை நனைத்து விடாதே நீண்டு உறங்குவேன்
பிறகு எழுப்பிவிடு நலமுடன் நகர்கிறேன்
BY ABCK