யார் நீ

காதில் கேட்ட குரல் கேட்டபடி
இருக்க

குரலை தொடர்ந்து நான் பின்
தொடர

அவள் பேசுவதை நிறுத்திவிட்டு
எனைப் பார்க்கிறாள்

கண்முன்னே அவள் உருவம்
அழகாக சிரிக்க

ஏன் சிரிப்பு என்ற வியப்பில்
நான்

சிரிக்கின்றேன் காரணமின்றி

பேச்சும் சிரிப்புமாக யாரும் இல்லா வெட்டவெளியில்

அவளோடு அளாவுகிறேன்

ஒருவரும் என்னை பார்க்கவில்லை

யார் நீ என கேட்கவுமில்லை

எழுதியவர் : நா.சேகர் (31-Oct-19, 8:37 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yaar nee
பார்வை : 242

மேலே