தடுமாறிய இதயம்

நீண்ட நாட்களின் பின் அவளைக் கண்டேன்
விழிகளால் என்னை சிறைபிடித்தவள்
அருகில் வந்ததும் என் கைகளைக் கோர்த்தாள்
சில வினாடிகள் என்னை மறந்த நான்
கழிசடையாய் மாறி அவளை
விழுங்க ஆரம்பித்தேன்
நாணத்தால் முகம் சிவந்தவள்
விலகி சிட்டாகப் பறந்து சென்றாள்
என்னிதயம் தட்டுத் தடுமாறி
அவள் காலடியே வீழ்ந்தது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (31-Oct-19, 1:22 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 627

மேலே