அவள்

இடையே இல்லாததுபோல் இருக்கும்
உன் இடைக்கு என் கண்ணம்மா
ஒட்டியாணம் வாங்கி வரவில்லை நான்
உன் இடையின் அழகுக்கு அழகு செய்ய
வேறேதும் தேவை இல்லையடி என்றபோது
அவள் சொன்னாள், ' அன்பே உன் அழகிய
கவிதை ரசனையை நான் போற்றுகிறேன்'
இல்லாததுபோல் இருக்கும் என் இடைக்கு
அணிகலன் வேண்டா, ஆனால் வேண்டும்
என்றே நினைக்கின்றேன் என் நீண்ட
அழகு என்றே நீ ரசிக்கும் என் கழுத்திற்கு
நல்ல தங்க ஆரம், அணிவித்து மகிழ்விப்பாய்
என் உள்ளம் சொல்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Nov-19, 8:35 pm)
Tanglish : aval
பார்வை : 270

மேலே