ஆட வந்தாள் அவள்
நீ ஆடிவரும் அழகைக்கண்டு
தோகை மயிலும் ஆடமறந்து
பாதையோரம் ஒதுங்கி உன்
நடையின் நளினத்தில் மயங்கி
கார்மேகம் போர்த்திய வானையும்
கூட பாராது நின்றது தோகையை
விரிக்காது ...... இது வினோதமே
என்று நான் நினைக்க மங்கை நீ
' மாதவிப் பெண்மயிலாய்' ஆடி வந்தாய்
மேடையானது என் மனது அதைக் கண்டு