என்னை உன்னில் தொலைத்தேன்
மதி வந்து மனதில் நிறைந்ததே
நதி சென்று கடலில் கலந்ததே
பூங்காற்று வீசும் போதெல்லாம்
நெஞ்சைத் தழுவும் உன் பூமேனி
நீலக் கடலாய் நீழும் நிலமாய்
அகன்று விரியும் உந்தன் ஞாபகங்கள்
உன் விழிகள் சொல்லும் ஆயிரம் மொழிகளில்
என்னை உன்னில் தொலைத்தேனடி
அஷ்றப் அலி