உண்மைக்குரியவள்
யாரிடமும் சொல்லாத உண்மைகளும்
உன்னிடம் சொல்லத் தடுமாறும் பொய்களும்
என்னைப் பொறுத்தவரை ஒன்றே
மௌனம் கூட சில நேரங்களில்
உன்னிடம் உண்மையை பேசுகிறதால்தான்
அமைதியாய் அழுகின்றன நிஜங்கள்
இன்னும் சில வேளைகளில்….
அமைதியீந்து பொய்களை மௌனிக்கவைத்து
நிஜம் பேசவைப்பயாய்
இமைகள் அற்றவையாக
உன் உண்மையின் விழிகள் இருப்பதால்தான்
உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை
எனக்கு தெரியாததெல்லாம் நீ அறியும்போது
என் உண்மைகளை திருடுகிறாயோ என்று நினைத்தேன்
நீ களவாடியதோ என் பொய்களை
மிகையாக சொல்லவேண்டுமானால்…
பதிவு செய்யப்படும் வாக்குமூலங்களில் கூட
உண்மையின் வெளிப்பாட்டை
உன் ஒருத்தியால் மட்டுமே உணரமுடியும்.