காதல் காலம்
பல கண்கள் உறங்கிய கதிரவன் விழித்த அந்நேரம்..
இந்த நான்கு கண்களும் இரண்டு மனங்களும் எண்ண தைரியத்தில் ஒன்றாய் இணைந்தனவோ?
செல்லும் பாதை அமைக்கும் போயி சேரும் இடத்தை... ஆர தழுவி கொண்ட தருணங்கள் மறக்கடிக்கும் இவ்வுலகத்தை.
காற்றும் கூட வாயடைத்து நிற்கும்.. அவ்வபோது வெண்ணிலாவின் வருகையும் ஊடலில் ஊடே தொல்லை தரும்.. இலை மறைக்கும் நொடியில் காதல் பரிமாற்றம் நடக்கும்..
கண்ட பொழுதே வெண்ணிலா மேக திரை கொண்டு வெட்கத்தில் முகம் மறைக்கும்.. தேன் கலந்து இதழ் தா என்று நான் கேட்டேன்.. என் பெயர் சொல்லி நீ தந்த முத்தம் என்னவென்று நான் உரைப்பென்....