அவள் சிரிப்பு
பற்றவைக்க தெறிக்கும்
அனல் பூ தெறிக்கள்
பார்க்க அத்தனை அழகு
தொட்டுவிட்டாலோ சுட்டுவிடும்
அனல் தெறிக்கள்
மத்தாப்பூ ......
பாவையின் சிரிப் பூ
உதிர்க்கும் முத்துத் தெறி
பரவசமூட்டும் அழகு தெறி
உள்ளத்தில் பதிந்து விட்டதால்
அள்ள முடியா தண் தெறிக்கள்
உள்ளத்தில் பதிந்துவிட
இன்ப காதல் சேர்க்கும்
அற்புத பூக்கள் ...
பாவையவள் சிரிப் பூ