வாலிபத்தை எழுப்பி

அமுதைப் போலே உனது அழகு வாய் இருக்க
அதில் உள்ள பற்கள் அடர் மயக்கம் கொடுக்க
பளிங்கு போன்ற முகமோ பல்சுவையைக் காட்ட
எடுப்பான நாசி எனது ஆசையைத் தூண்ட

எழிலான கழுத்து பொலிவினால் மின்ன
கூந்தலின் நீளம் குதுகலத்தைக் கொடுக்க
தோள்களின் தோரணை தொட்டு அணைக்க தூண்ட
முதுகின் முழுபுறம் முத்தமிட அழைக்க

தாவும் கொடிபோல் நான் தத்தளித்து நிற்க
கள்ளச் சிரிப்போடு நீ கண்டுக்கொள்ளாமல் செல்வது
கருங்குளவியை நெஞ்சில் கடிக்கச் செய்வது போலே
கடுந்துன்பம் வாட்டி கடத்துதடி காலத்தை

வடிவுடைய பெண்ணே வனப்பு மிக்கவளே
வாடி நிற்கும் என்னை வாஞ்சையோடு அணைத்து
வகைக்கொரு முத்தம் வகை வகையாய் கொடுத்து
வாலிபத்தை எழுப்பி வாகைச் சூடிக் கொள்ளேண்டி.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Nov-19, 9:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே