நினைவுகளின் நெடுஞ்சாலை

சொல்லிலே முள் எய்து
நெஞ்சத்தைப் புண்ணாக்கி/
உறங்கிய கோபத்தை
இறங்கியே உசுப்பி விட்டு/

நெருங்கிய என்னை
நெருப்பாக எரிய வைத்து/
இறுதியில் காதலை
எரியூட்ட வைத்தாய்/

உறுதியாக பிரிவு என்னும் ஒற்றை வார்த்தையை உரைத்து விட்டு /
நீ திசை மாறியே பயணத்தைத்
தொடர்ந்து விட்டாய்/

நரம்பெங்கும் விசமாக
ஏறித் தங்கி விட்டது /
உன்னோடு பழகிய இனிய
நிகழ்வுகள்/

என்னை மறந்து உன்
நினைவில் ஏங்குகின்றேன் /
என்னமோ நானும் உலகில் இயங்குகின்றேன்/

ஏதேதோ செய்து முடிக்கின்றேன்/
என்னவென்று புரியாமல்
முடிவில் நின்று முழிக்கின்றேன்/
பேச்சுடன் மூச்சையும் நிறுத்தும் வரை/
உன் நினைவுகளே என் நெடுஞ்சாலை /

( தேர்வுக்கு நன்றிகள் ❤🙏)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Nov-19, 8:57 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 188

மேலே