உசுருக்கு உசுரானவனே
அரச்ச மஞ்சள் பூசட்டுமா?
அழகைக் கொஞ்சம் கூட்டட்டுமா?
இளைத்த உடலைத் தேத்தட்டுமா?
இளம்பிறையாக மாறட்டுமா?
முகத்தைப் பார்த்துப் பேசட்டுமா?
சுவற்றைப் பார்த்துச் சிரிக்கட்டுமா?
வெட்கத்தில் முகம் மறைக்கட்டுமா?
பக்கத்தில் உன்னை அழைக்கட்டுமா?
நகத்தைக் கொஞ்சம் கோதட்டுமா?
நிலத்தில் கோலம் காலால் போடட்டுமா?
நிழலைக் கண்டு நாணட்டுமா/
நிசப்தம் இன்றி ஓடட்டுமா?
உருக்கெண்ணெய் போடட்டுமா?
திருக்குச் சடை வாரட்டுமா?
திருத்திக் கொண்டை போடட்டுமா?
உதிர்ந்த மலரைக் கட்டட்டுமா?
கொண்டை மேலே செருகட்டுமா?
உமக்கு நானு யாரு மாமா?
உன்னோட தங்கத் தேர் ஆமா/
எனக்கு நீ யாரு மாமா?
உசுருக்கு உசுரான புருசன் ஆமா/
ஓவியருக்கு வாழ்த்துகள்