மழைநீர் சேகரிப்பு 555

தண்ணீர்...
கடல் தாய் கொடுக்கும்
நீரை
கதிரவன் எடுத்த
வெண்மேகம் பரிசாக வாங்கிக்கொண்டு

கார்மேகமாய் மாற்றிக்கொண்டது...


கார்மேக குளிர்ச்சியில்

பூமிதாயும் குளிர்கிறாள்...


நம் தாகமும்
தீர்க்கிறாள்...


கரைபுரண்டு ஓடும் தண்ணீரை

சேமிக்க வழியில்லை...


கோடை கதிரவன் வெப்பத்தில்

நம்மை சோதிக்க...


கார்மேகம்

கேள்வி கேட்கிறது...


நான் கொடுத்த நீரை

சேமிக்க தவறியது நீ...


சேமித்தால் பாதுகாத்துக்கொள்ள

என் தோழி பூமி இருக்கிறாள்...


தாகம் எடுத்தால்

தண்ணீரை தேடுகிறாய்...


கோடையில் நான்

சேமித்து கொள்கிறேன்...


கடல் தாயிடமிருந்து...


என் சேமிப்பை உனக்கு
கொடுத்தால்
நீ சேமிக்க தவறினாய்...


கோடையில்
எனக்காக
ஏங்குகிறாய்...


மழைநீராய்

என்னை பார்க்காதே...


உன் உயிர் நீராய்

என்னை சேமித்துவை...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Nov-19, 3:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 439

மேலே