இயற்கை- மழை

விழித்துக்கொண்டே இருந்த
நீல வானம் கொஞ்சம் அயர்ந்துபோனது
தூக்கம் வந்ததோ..... வானிற்கு ,
கருமேகப் போர்வையால் தன்னை
முழுக்க மறைத்துக்கொண்டு தூங்கத்தொடங்க,,
குறட்டை விட்டது ..... மின்னல் இடியாக
மண்ணின் மக்களை மிரட்ட....,.
வியர்க்க தொடங்கியது வானிற்கு.....,
மண்ணில் மழைத்துளிகளாய், மழையாய்
விழுத்துக்கொண்டது வானம்
மேகப்போர்வை நீக்கி......
மீண்டும் வானம் நிர்மலமாய் நீலமானது.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Nov-19, 3:48 pm)
பார்வை : 452

மேலே