பொய்

குழந்தை பொய் பேசினால்
அது அழகு

அப்பா பொய் பேசினால்
அது ஊக்கம்

அம்மா பொய் பேசினால்
அது முன்னேற்றம்

ஆசிரியர் பொய் பேசினால்
அது திறமை

மனைவி பொய் பேசினால்
அது தேவை

கணவன் பொய் பேசினால்
அது இயலாமை

நண்பன் பொய் பேசினால்
அது பலவீனம்

பொது மக்கள் பொய் பேசினால்
அது புரளி

ஊடகங்கள் பொய் பேசினால்
அது உண்மையாக

அரசியல்வாதி பொய் பேசினால்
அது கொள்கை

கட்சி பொய் பேசினால்
அது தேர்தல் அறிக்கை

அரசு பொய் பேசினால்
அது உத்தரவு

முதலாளி பொய் பேசினால்
அது நிர்வாகம்

தொழிலாளி பொய் பேசினால்
அது அனுபவம்

அதிகாரி பொய் பேசினால்
அது அறிக்கை

உடன் பணிபுரிவன் பொய் பேசினால்
அது விசுவாசம்

பிச்சைக்காரன் பொய் பேசினால்
அது ஏமாற்ற

இல்லாதவன் பொய் பேசினால்
அது பசி

அனல் மனித நீ
பொய் பேசினால்
அது குற்றம்.....

-- இப்படிக்கு பொய்யான உண்மை

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (13-Nov-19, 7:17 pm)
Tanglish : poy
பார்வை : 1304

மேலே