அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நற்குணத்தின் பிறப்பிடமே! பாரூக் சுல்தானே,

உடன் பிறந்த சகோதரனே

உன்னுடைய அரும்பு மீசையே
குறும்பு குணத்தின் ஆழமடா

மனதை கொள்ளையடிக்க தெரிந்த
கொள்ளைக்காரனே !

எங்களின் வீட்டின் ஆசானே

குழந்தைகள் தினத்தில் பிறந்தால்
குழந்தையாகவே இருப்பவனே

நாம் பெற்றோர்க்கு தாய் தந்தை
என்ற பட்டம் வந்தது நீ பிறந்ததாலே

இன்று அகவையோ 26 டா , நீ கண்ட கனவெல்லாம்
விரைவில் நிறைவேறிடும் பாருடா .....




மு.கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.கா. ஷாபி அக்தர் (13-Nov-19, 11:12 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 813

மேலே