துப்புரவு தொழிலாளர்

அழுக்கு உடையில்
இழுக்கில்லா
உள்ளம் உடையவர்கள்

முகம் சுளிக்காமல்
அகம் வலிக்காமல்
நித்தம் நித்தம்
சுத்தம் செய்யும்
சுந்தர புருஷர்கள்

மூச்சு நின்றுப்போகும்
நாற்றத்திலும் ஊருக்கு
ஏற்றமிகு பணிசெய்பவர்கள்

பண்டிகை
நாட்களிலும் அழுக்கு
உடையணியும்
அழகானவர்கள்

சுற்றுச்சூழலை
பேணிகாக்கும்
பாதுகாப்பு வீரர்கள்

போராட்டமும்
வேலை நிறுத்தமும்
இவர்கள் செய்தால்
என்னவாகும் இந்நாடு

வணங்குவோம்
மனிதநேயம் மிக்க
மாசைப்போக்கும்
மாசற்றவர்களை

நாட்டில் இவர்களே இல்லாவிடில்
பூந்தோட்டமே ஆயினும்
மூக்கை பொத்தும்
நிலை வந்துவிடும்...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Nov-19, 4:34 am)
பார்வை : 269

மேலே