அந்த வாழ்க்கை

கிளியே கிளியே ஆசைக் கிளியே
கேளடி சேதி கருத்தில் கொள்ள,
எளிதாய் மனிதனை நம்பி விடாதே
ஏய்த்தே உன்னைக் கூண்டி லடைப்பான்,
வெளியே விடுவான் சீட்டை எடுக்க
வெற்றுரை பேசிக் காசு பறிப்பான்,
அளிப்பான் ஒருநெல் அடைப்பான் மீண்டும்
அடிமை வாழ்க்கை வேண்டாம் பறந்திடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Nov-19, 5:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha vaazhkkai
பார்வை : 206

மேலே