தூசொலிக்கும் வண்ணானுக்கு உண்டோ வழக்கு - நீதி வெண்பா 26

நேரிசை வெண்பா

குணநன்(கு) உணராக் கொடியோர் இடத்திற்
குணநன் குடையார் குறுகார்! - குணமுடைமை
நண்ணாச் சமண நகரத்திற் தூசொலிக்கும்
வண்ணானுக்(கு) உண்டோ வழக்கு. 26 நீதி வெண்பா

பொருளுரை:

குண நன்மையை அறியாத துட்டரிடத்தில் குணநன்மையுடையோர் சேர மாட்டார்!

ஆடை உடுப்பதை விரும்பும் குணமில்லாத சமணர்களிருக்கும் நகரத்திற் துணிகளை வெளுக்கின்ற வண்ணார்க்கு வேலையுண்டோ? இல்லை என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

கருத்து:

துட்டர்களிடத்துத் தமக்கு ஒரு தொழிலும் இல்லாமையால், நல்லோர் அவரை அணுகார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 1:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே