நட்பு
மலர்களில் நச்சு மலர்கள் உண்டு
கனிகளில் நச்சு கனிகள் உண்டு
நீர் சுனைகளிலும் நச்சு நீர் சுனை உண்டு
மலர், கனி, நீர் இவற்றை நாடுவோர்
இவற்றின் தன்மை அறிந்து நல்லதை
நாடுதல் வாழ்க்கையில் இன்பம் சேர்க்கும்
அதுபோல நல்ல நட்பை நாடுவோர்
நாடும் நண்பரின் தரமறிந்து நட்பு சேர்க்க
வாழ்வில் நலம் பெறலாம் நட்பால் உயரலாம்