துறவு
---------------------------------------------------
ஒளிந்து கொண்டிருக்கும்
என் வாழ்க்கை
ஒளியை தேடும் இரவில்
மயக்கமுறும் பகலில்.
எவர் கையொப்பத்தில்
சீர் பெற்று உயிர் கொள்ளுமோ
அவருக்கென
அடுக்கப்படுகிறது என் தவம்.
சதா மௌனத்துடன்
உருகிக்கொண்டிருக்கும்
மணித்துளிகள் மீது கசியும்
என் வியர்வைத்துளிகள்
உலரும் பொழுதினில்
இரத்தப் பொருக்குகளாகிறது.
நீளும் பயணத்தில்
எழுதி இலைப்பாறவாவது
இணங்கும் மனம்.
__________________________________
(காலச்சுவடு கவிதைகள் என்னும் புத்தகத்தில் 2004 இல் வெளியான கவிதை இது.பதிப்பு: காலச்சுவடு)