என் நெஞ்சம் விரிந்தது கவிதை வரிகளில்
மலர்கள்
மடல் விரிய
காலை வானில்
கதிர் விரிய
இளம் கதிரில்
தாமரை இதழ் விரிய
இளவேனில் தென்றலில்
மூடிக்கிடந்த மொட்டுக்களும் விரிய
மரக்கிளை குயிலின் குரல்
இசைப்பாடலாய் விரிய
மௌனப் புன்னகையில்
அவள் செவ்விதழ் விரிய வந்தாள்
என் நெஞ்சம் விரிந்தது
கவிதை வரிகளில் .....!