பூக்களெல்லாம் கைதட்டி வரவேற்கும்
கண்ணின் கருவிழிகள் இரண்டும்
காதல் கவிதை பாடும்
காற்றில் கூந்தல் கவிதைச் சந்தங்களில்
கலைந்து ஆடும்
புன்னகை இதழ்கள் இரண்டிலும்
செந்தமிழ் முத்துக்கள் உருளும்
பூவை காலை இளந்தென்றலில்
பூப்பறிக்க வரும் வேளையில்
பூக்களெல்லாம் கைதட்டி வரவேற்கும் !