நீயில்லா நிமிடங்கள்

நீயில்லாத நிமிடங்கள் எனக்கு
சூரியன்சுட்ட பனித்துளியாய்
பேரலை நனைத்த சுவடுகளாய்
பகலினில் மறைந்த விண்மீன்களாய்
நீரினைப்பிரிந்த செந்தாமரையாய்
காற்றினில் கரைந்த ஒலித்துளிகளாய்
மேகத்தைப்பிரிந்த ஒருமழையினாய்
மரத்தினில்விழுந்த ஓரிலையாய்
கூட்டினைமறந்த சிற்றெரும்பாய்
எழுத்துகள் மறைந்த பெரும்மொழியாய்
தவித்துதான் போகிறதடி..

எழுதியவர் : Rafiq (19-Nov-19, 10:04 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 715

மேலே