இறப்பு சான்றிதழ்
காலையில் தான்
பார்த்து பேசினேன்
அன்போடு பேசினார்
என்னால் நம்ப முடியவில்லை
சாவு வந்தால்
இப்படி தான் வரனும்
நல்ல மனுஷன்
நல்ல சாவு
போய் சேர்ந்துட்டான்
ஊரார்கள்
இறந்துப்போனவரை
பற்றி பேசும்போது
இதைப்போன்ற அனுதாப
வார்த்தைகள்
சொல்லும்போது தான்
அவருக்கான உண்மையான
இறப்பு சான்றிதழ்
வழங்கப்படுகிறது